சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு: நீதிமன்றம் அதிரடி

சபாநாயகர் அப்பாவுக் எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-10-25 12:02 GMT

appavu

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சபாநாயகர் அப்பாவுக் எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செயலலிதா மரணத்திற்கு பிறகு 40 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேசியதாக சபாநாயகர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. சபாநாயகர் பேச்சு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "புகார்தாரர் தனிப்பட்ட முறையில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை" என தெரிவித்தார். பின்னர், சபநாயகர் அப்பாவு எதிரான அவதூறு வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News