சபரிமலைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் - சேலம் கோட்ட ரயில்வே தகவல்
சபரிமலைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் - சேலம் கோட்ட ரயில்வே தகவல்
By : King 24x7 Website
Update: 2023-12-13 17:31 GMT
கோவை:கேரள மாநிலம் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் அதிக அளவிலான பக்தர்கள் வரும் நிலையில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கபட உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே அறிக்கை விடுத்துள்ளது.18ம் தேதி செகந்தராபாத்தில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும் வண்டி எண் 07157 மறுநாள் இரவு 10.05ற்கு கோட்டையம் சென்றடைகிறது.மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டி மற்றும் இரண்டாம் வகுப்பு பொது பயணிகள் பெட்டிகள் உள்ள இந்த ரயில் பெகும்பட்,லிங்கம்பள்ளி, விக்ரபாத், தந்தூர், செரம், யாத்கிர், கிருஷ்ணா, ராய்சூர், மந்ராலயம்சாலை, அதோனி, குந்தக்கால், கூட்டி,தடிபத்ரி, யெரகுண்டலா, கடப்பா, ,ரசம்பெட், கொடுறு, ரேனிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் வழியாக கோட்டையம் சென்றடைகிறது.இதேபோல் வண்டி எண் 07158 கோட்டையத்தில் இருந்து 20ம் தேதி அதிகாலை 12.30 செகந்தராபாத் புறப்படும் ரயில் மறுநாள் 4.35 மணிக்கு செக்ந்த்ராபாத் சென்றடையும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது