ரியல்மி ஜிடி 7 ப்ரோவை நவம்பர் 26ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் !!
ரியல்மி ஜிடி 7 ப்ரோவானது சீனாவில் தற்போது விற்பனையாகி வரும் நிலையில், வருகிற நவம்பர் 26ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி, தான் அளித்த வாக்குறுதியின்படி, சீனாவில் தனது புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அதன் பிரீமியம் ஸ்மார்ட்போன் வரிசையில் ரியல்மி ஜிடி 7 ப்ரோவும் இணைந்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே மற்றும் தற்போதைய உலகின் அதிக செயல்திறன் கொண்ட பிராசரான ஸ்னாப்டிராகன் 8 எலைட் மற்றும் புதுமையான கேமரா உள்ளிட்ட சிறப்பம்சங்கள் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோவானது மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எக்ஸ் ஷோரும் விலை 12GB + 256GB - 3699 யுவான் (சுமார் ரூ. 43,808)
16GB + 256GB - 3899 யுவான் (சுமார் ரூ. 46,176), 12GB + 512GB - 3999 யுவான் (சுமார் ரூ. 47,361), 16GB + 512GB - 4299 யுவான் (சுமார் ரூ. 50,914), 16GB + 1TB - 4799 யுவான் (சுமார் ரூ. 56,835) என நிர்ணயம் செய்துள்ளது.