அரியலூர் மாவட்டத்தின் அம்சங்கள் !

Update: 2024-01-27 10:18 GMT

அரியலூர் மாவட்டம் 

அரியலூர் மாவட்டம் வளமான வரலாற்று சிறப்புடையது. பாண்டியர்களும் ஹொய்சாளர்களும் விஜயநகர பேரரசர்களும்,, பாளையக்காரர்களும் இப்பகுதியை ஆண்டுள்ளனர் . மனித இனம் தோன்றுவதற்கு முன் கடலுக்கு அடியில் மூழ்கியிருந்து பிற்காலத்தில் கடல் நீர் கிழக்கு நோக்கி நகர்ந்ததால் உருமாறிய பாறைகள் நிலமாக பெறப்பட்டது. அதுதான் அரியலூர் ஆகும். அதன் பிறகு தான் மனிதர்கள் குடியேற தொடங்கினார்கள் .அதனால் தான் இதனை புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா என்று அழைக்கிறார்கள் .டைனோசர் முட்டைகள் கூட இந்த மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன .எனவே தொல்லியல் விலங்கியல் பூங்கா என்று இதனை அழைப்பார்கள். கொள்ளிடத்திற்கு வடக்கிலும். வெள்ளாற்றுக்கு தெற்கிலும், ஊட்டத்தூருக்கு கிழக்கிலும், சிதம்பரத்திற்கு மேற்கிலுமாக கிராமப் பூமிகளை உண்டாக்கி அதற்கு அரியலூர் என பெயர் சூட்டினார். பிறகு இராமநயினார் அரியலூர் குறுநில மன்னராக திம்மராயரால் கிபி 1491-ல் நியமிக்கப்பட்டார் .அரியலூர் அரண்மனை முகமது அலியின் படையெடுப்பால் வளர்ச்சி குன்றியது .பண்டைய சோழ நாட்டின் ஒரு பகுதியாக விளங்கி ய அரியலூர் மாவட்டம் ஜனவரி 1. 2001 இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை கொண்டு உருவாக்கப்பட்டது .பின்னர் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து தமிழகத்தில் 31 வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது .கங்கைகொண்ட சோழபுரம்

பதினோராம் நூற்றாண்டில் தமிழகத்தின் தலைசிறந்த மன்னனாக விளங்கிய முதலாம் ராஜேந்திர சோழன் கடல் கடந்து கடாரத்தையும் மற்றும் பல தீவுகளையும் வெற்றி கொண்டான் அவனுடைய வெற்றிக்கொடி இந்தியாவின் வடக்கே கங்கை நதி வரை பறந்தது இதனால் அவனுக்கு "கங்கைகொண்ட சோழன்" என்ற பெயர் வந்தது. மாபெரும் வெற்றியை கொண்டாடுவதற்காக கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரின் நிர்மாணித்து அங்கே அழியாத கோவில் ஒன்றை தோற்றுவித்தான் .கங்கைகொண்ட சோழபுரம் கோயில் பல்வகை புதுமையாக அமைத்து கட்டப்பட்டுள்ளது .இக்கோயிலில் சிற்பங்களும் மிகச் சிறப்பாக விளங்குகின்றன கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை விட சற்று உயரம் குறைந்தது எனினும் கட்டட அமைப்பின் நுணுக்கத்தில் மிகச் சிறந்தது. கங்கைகொண்ட சோழபுரத்திலும் விமானமே மிகவும் உயர்ந்ததாக விளங்குகிறது.

காரை வெட்டி

தமிழ்நாட்டில் 13 பறவை சரணாலயங்கள் உள்ளன. நீர்நிலைகளில் உள்ள பறவைகளை பாதுகாக்க பறவைகள் அதிகம் தங்கும் பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்து அவற்றை பாதுகாத்து வருகிறது. காரை வெட்டி சரணாலயம் அரியலூர் மாவட்டத்தில் அரியலூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

உடையார் பாளையம்

தோல் பொருள்களுக்கும் ,தரை விரிப்பிற்கும் ,கைத்தறி துணிகளுக்கும் இவ்வூர் பெயர் பெற்றது. இப்பொருள்கள் பல இடங்களுக்கும் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன.

சிமெண்ட் தொழிற்சாலை

டால்மியாபுரத்தில் சிமெண்ட் தொழிற்சாலை நடைபெறுகிறது .தொழிலகத்திற்காக டால்மியாபுரம் என்னும் ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லக்குடி பெயர் மாற்றத்தின் போது இந்த ஊர் மக்கள் மத்தியில் புகழ்பெற்றது

அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைகள்

அரியலூருக்கு கிழக்கில் மணல் ஏரி என்னும் ஊருக்கு அருகில் அரசினர் சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றும், அரியலூருக்கு தெற்கில் தனியார் துறையினரால் நடத்தப்படும் சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றும் இயங்கி வருகின்றன.

Tags:    

Similar News