கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் மலைச்சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2024-05-20 16:27 GMT

சாலையில் முறிந்து விழுந்த மரம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காலை வேளை முதல் மாலை வேளை வரை தொடர்ந்து மழையானது பெய்து வந்தது, இந்நிலையில் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் குருசடி உள்ளிட்ட இரண்டு இடங்களில் மரங்கள்முறிந்து விழுந்தன,.

இதனால் மலைச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்து தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மரத்தினை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்,இது போன்ற மழைக்காலங்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மலைச்சாலையில் ரோந்து பணியிலும்,

கண்காணிப்பு பணியிலும் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது, இதே போன்று பாம்பார்புரம் பகுதியில் தனியார் ராட்சத பெயர் பலகை எதிர்பாராத விதமாக அறுந்து சென்னையை சேர்ந்த சுற்றுலாப்பயணியின் வாகனம் மீது விழுந்தது, இதனால் சுற்றுலாப்பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர் இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News