பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாறுகளும் இயற்கை வளங்களும்

Update: 2024-02-22 11:11 GMT

பெரம்பலூர் 

தமிழ்நாட்டின் மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்த சிறிய மாவட்டம் பெரம்பலூர் மாவட்டமாகும் பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை சிறப்பாக நடைபெறுகிறது இங்குள்ள பெருமாள் கோயில் புகழ்பெற்றது கண் நோய்க்கு இக்கோயிலில் பூக்கும் நந்தியாவட்டை பூவை கண்களில் ஒற்றிக் கொள்வர் இங்குள்ள வெள்ளந் தாங்கி அம்மன் கோயிலும் மக்களால் பூசிக்கப்படும் பெரிய கோயிலாகும்.

மதுர காளியம்மன்

சிறுவாச்சூர் கிராமத்தில் அமைந்த மதுர காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது .இக்கிராமம் பெரம்பலூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்கோயில் வாரம் இரண்டு முறை மட்டும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்படும் .

செட்டிகுளம் செட்டிகுளம் குன்னம் வட்டம் ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியாகவும் இவ்வூர் பழங்காலத்தில் கடம்ப வனமாக இருந்ததாகவும் இப்பகுதியில் இறைவன் ஏகாம்பரேஸ்வரன் சுயம்புவாக எழுந்தருளி மன்னன் குலோத்துங்க சோழன் மூலமாக ஆலயம் எழுப்பித்துக் கொண்டதாகவும் ஐதீகம் அருள்மிகு காமாட்சி உடனமர ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில் ஆகியவை இவ்வூரில் உள்ள கோயில்கள் ஆகும் .

அணைகள்

சின்னாறு அணை விசுவகுடி அணை முதலிய அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு விவசாயத்திற்கும் நீர்மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சின்னாறு அணை

சின்னாறு நீர் த்தேக்கம் தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த எறையூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது இது சின்ன ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கம் ஆகும் நீர்த்தேக்கம் 1958 இல் அப்போதைய முதலமைச்சர் காமராஜர் மற்றும் கக்கன் ஆகியோரின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம் ஏறத்தாழ 716 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன இதை ஒட்டி அரசு பயணியர் மாளிகையும் உள்ளது

விசுவக் குடி அணை

தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள விசுவகுடிக்கு அருகில் கல்லாற்று ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதாகும்.

மயிலூற்று அருவி

மயிலூற்று அருவி அல்லது மயிலூத்துஅருவிபெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள லாடாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஓர் அருவி .இது பெரம்பலூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் வழியில் உள்ளது .

ஏரிகள்

பெரிய ஏரி ,சித்தேரி, வெண்பாவூர் ஏரி வடக்கலூர் ஏரி, கீரவாடி ஏரி, லாடபுரம் பெரிய ஏரி, குரும்பலூர் ஏரி ஆகிய ஏரிகள் பெரம்பலூருக்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றன

இரஞ்சன் குடிக்கோட்டை இரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஓர் அழகிய சிறிய கோட்டையாகும்.

சாத்தனூர்

சாத்தனூர் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி ஆகும் . இவ்வூரில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது .

கோரையாறு அருவி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள கோரையாறு கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பச்சைமலை மீது கோரையாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது .இந்நீர்வீழ்ச்சியில் மலை உச்சியில் இருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கமும் உள்ளது இவ்வருவியில் ஆண்டுதோறும் மழைக்காலத்திலும் மற்றும் அக்டோபர் முதல் ஜனவரி வரை உள்ள குளிர்காலங்களிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் இருக்கும்.

Tags:    

Similar News