கடலூர் மாவட்டத்தின் வரலாறுகளும் அதன் சிறப்புகளும்

Update: 2024-02-09 10:11 GMT

கடலூர் மாவட்டம் 

இந்தியாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட 250 மாவட்டங்களில் ஒன்றான கடலூர் புராணங்களில் ஸ்ரீ ராமகேத்ரா என்று அழைக்கப்படுகிறது.ஆறு காடுகளை உடைய பகுதி என பொருள்பட்டதால் தென்னாற்காடு மாவட்டம் என்று அழைக்கப்பட்டது .சென்னையில் இருந்து 183 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்து இருக்கிறது இம் மாவட்டத்தில் முதல் ஆட்சியர் கேப்டன் கிரஹாம் ஆவார். கடலூரில் அறமும் ஆன்மீகமும் கைகோர்த்து தழைத்தன. பல்லவர்கள் சோழர்கள் பாண்டியர்கள் உடையார்கள் விஜயநகர ஆட்சியாளர்கள் செஞ்சி நாயக்கர்கள் ,பிஜப்பூர்சுல்தான்கள், மராத்தியர்கள், முகலாயர் என பலர் ஆண்டு இருந்தாலும், தனக்கே உரிய கலை கலாச்சாரம், பண்பாடு எதையும் யாரிடமும் எப்போதும் இழக்காமல், இன்றைக்கும் தனித்தன்மையோடு திகழும் பூமி தான் இந்த கடலூர். ஒரு பக்கம் நீல நிற கடலாலும் ஒரு பக்கம் பச்சை நிற வயல்களாலும் இன்னொரு பக்கம் தொழிற்சாலைகளாகவும் பரந்து விரிந்தது கடலூர் மாவட்டம் பணம் ஈட்ட பல வழிகள் உண்டு. ஆனால் உணவு உற்பத்தி செய்ய ஒரே வழி தான் இருக்கிறது அதுதான் விவசாயம் என்பதை உணர்ந்தவர்கள் இந்த கடலூரை ஆண்ட சோழர்கள். முதலாம் பராந்தக சோழன் வீராணம் ஏரியை உருவாக்கி வேளாண்மையை வளப்படுத்தி கடலூர் மாவட்டத்தை பசுமை பூமியாக மாற்றினார் .தமிழகத்தில் முந்திரி அதிகம் விளையும் மாவட்டம் கடலூர்.

கொள்ளிடம் பாயும் பகுதிகளில் நெல்லும், பண்ருட்டி வட்டத்தில் பலாப்பழமும், முந்திரியும் பெருமளவு விளைகின்றன. கரும்பு கேழ்வரகு கம்பு சோளம் வரகு எள்,துவரை உள்ளிட்டவையும் இங்கு அதிகம் விளைகின்றன சுண்ணாம்புக்கல் , உயர்ந்த ரககளிமண் வெள்ளை களிமண், பழுப்பு நிலக்கரி என கடலூர் கனிம வளம் நிறைந்தது,

சர்க்கரை ஆலைகள் எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை முதலியன ரசாயனக் கலவை உரத் தொழிற்சாலைகள் ,வடலூர் சேஷசாயி தொழிற்சாலை ஈஐடி பாரி சாக்லேட் மற்றும் சர்க்கரை ஆலை சிப்காட் தொழிற்சாலை போன்றவை மாவட்டத்தின் முக்கிய தொழிற்சாலையாக விளங்குகின்றன நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை நாட்டின் மிகப் பழமையான சர்க்கரை ஆலைகளுள் ஒன்று. சர்க்கரை, சாக்லேட்டுகள், எரி சாராயம் போன்றவை இங்கு தயாரிக்கப்படுகின்றன .

கடலூரில் ஆங்கிலேயர்கள் புனித டேவிட் கோட்டை என்ற கோட்டையினை கட்டினர் .இதுவே தமிழகத்தின் முதல் தலைநகரமாக விளங்கியது. ஆன்மீகம் உடற்பயிற்சி தொடர்புடைய யோக சாஸ்திரம் எனப்படும் நூல் இங்கு வாழ்ந்த பதஞ்சலி முனிவரால் இயற்றப்பட்டது.

Tags:    

Similar News