கரூர் மாவட்டத்தின் வரலாறுகளும் அதன் சிறப்புகளும்

Update: 2024-02-02 12:07 GMT

கரூர் மாவட்டம் 

தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த பட்டணங்கள் ஒன்றான கரூர் அதன் செல்வாக்கும் கலாச்சாரமும் நிறைந்த மரபுக்கு பெயர் பெற்றது .பல்வேறு கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும், கரூரின் பெயர் கருவூர், வாஞ்சி ,ஆடிப்பூரம் ,பாப்பாதீசுரம், வாஞ்சி மூதூர், திருவானிலை,வாஞ்சுலா ரணியம், கருவைப் பட்டினம் திருவிதுவக்கோட்டம் ,முடிவழங்கு வீரசோழபுரம், கர்பபுரம், பாஸ்கரபுரம், ஆடகமாடம், ஷண்மங்கலம் ஷேத்திரம் ,சேரமா நகரம் மற்றும் கரூரா என பல்வேறு வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது கரூர் அருகே உள்ள ஆறு நாட்டார் மலை கல்வெட்டுகள் சேர மன்னர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கின்றன. இப்பட்டணம் நகை தயாரிக்கும் மையமாகவும், வாணிக மையமாகவும் விளங்கி வருகின்றது. நெசவு தலைநகரம் என அழைக்கப்படும் கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்குகிறது காவேரி ,அமராவதி ,நநல் காசி, குடகனாறு மற்றும் நொய்யல் உள்ளிட்ட பல நதிகள் இந்த மாவட்டத்தில் பாய்ந்து செல்கின்றன.

இந்து மத நம்பிக்கையின்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகின்றது அதன் பொருட்டே இந்த ஊர் கருவூர் என என்று அழைக்கப்படுவதாகவும் கூறுவர். அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்க காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய காசுகள் கரூரில் மட்டும் தான் மிகுதியாக கிடைத்திருக்கின்றன. முற்காலத்தில் கரூரில் தங்க நகை வேலைப்பாடுகளும் வைரம் பட்டை தீட்டும் தொழிலும் சிறப்பாக நடந்திருக்கின்றன இங்கு ஆறுநாட்டார் மலையில் உள்ள கல்வெட்டுகளில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அமராவதி நதி கரையில் அமைந்துள்ள வஞ்சி மாநகரை சேரன் செங்குட்டுவன் தலைநகராக கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்த வஞ்சி மாநகரே கரூர் என்று கருதப்படுகிறது. புலவர்களால் பெருமையும் புகழும் பெற்ற கரூர் கலிங்க நாட்டு பெருவணிகர் ஒருவரையும் பெரும் புலவராக மாற்றி இருக்கிறது.கரூர் பசுபதீஸ்வரர் ஆலயமும் ஒன்று பேரரசர் சோழனின் ஆன்மீக குருவும் தஞ்சை பெரிய கோயிலின் லிங்கத் திருவுருவை பிரதிஷ்டம் செய்தவரும் திருவிசைப்பா இயற்றிய வருமான கருவூர் தேவர் அவதரித்த ஊர் இந்த கரூராகும். கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய காகித ஆலையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தென்னிந்திய சர்க்கரை பொருளாதாரத்தில் புகளூர் முக்கிய இடம்பெற்றதால் அகண்ட காவிரியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது புகளூரை ஒட்டி உள்ள தவித்ட்டுப்பாளையத்தையும் வேலூரையும் நாமக்கல் மாவட்டத்தையும் இணைக்கிறது. தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள காகித ஆலையும் ,வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது. புகளூரில் சேரர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கொசுவலை தயாரிக்கின்ற மாவட்டம் இந்த கரூர் மாவட்டம். கிட்டத்தட்ட 1,800 கோடி ரூபாய் கொசுவலை தயாரிக்கும் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறார்கள் கரூர் மக்கள். இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டிற்கும் கொசுவலை தயாரித்து அனுப்பக்கூடிய ஆற்றல் வாய்ந்தவராக இருக்கின்றனர். விவசாயம், தொழில் ,ஜவுளி ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த மாவட்டம் இந்த கரூர் மாவட்டம் .கரூர் மாவட்டத்தில் உள்ள தோகை மலையில் கிடைக்கும் வண்ண பளிங்கு கற்கள் உலக அளவில் புகழ் பெற்றுள்ளன.கரூர் அரவக்குறிச்சி பகுதியில் விவசாய பெருங்குடி மக்களால் அதிக அளவில் முருங்கை மரங்கள் பயிரிடப்படுகின்றன இங்கே விளைகின்ற முருங்கை காய்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில் கடவூர் மலைப்பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தின் அருகில் அமைந்துள்ள பொன்னணி ஆறு அணைக்கட்டு சுற்றுலாத்தலமாகும். இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் நீர் அங்குள்ள பாசன நிலங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

Tags:    

Similar News