கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி: சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Update: 2024-05-20 16:24 GMT

மலர் கண்காட்சியை ரசித்த மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி துவங்கி, இன்று 4வது நாளாக தொடர்ந்து மலர்கள் கண்காட்சி நடைபெற்று வருகின்றது, இதனையடுத்து கொடைக்கானலில் காலை முதலே மழையானது தொடர்ந்து பெய்து வருகின்றது, பெய்து வரும் மழையினை பொருட்படுத்தாமல்,

சுற்றுலாப்பயணிகள் குடைகளை பிடித்து கொண்டு பூங்காவில் மலர் படுக்கைகளில் பூத்துள்ள வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்தனர்,மேலும் பூங்காவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள உருவங்களையும் சுற்றுலாப்பயணிகள் கண்டு தசித்தனர்,மேலும் இன்று 4வது நாள் மலர் கண்காட்சியில் 3,444 சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்துள்ளதாகவும் இதன் மூலம் 231000 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தோட்டக்கலை துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்,

மேலும் இன்று நடைபெற்ற கோடை விழாவில் மல்லர் கம்பம் நிகழ்ச்சி சிறுவர்கள் நிகழ்த்தி காட்டினர்,இதில் மல்லர் கம்பம் மீது பல்வேறு சாகசங்களை சிறுவர்கள் செய்து அசத்தினர்,மேலும் இந்த கலையானது ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர்கள் அழிக்க முயற்சி செய்ததாகவும்,

இந்த கலையை வளர்ப்பதற்காக விழுப்புரம்,நிலக்கோட்டை பகுதியில் மல்லர் கம்பம் பயிற்சி மையம் செயல்பட்டு வருவதாகவும் விழா மேடையில் தெரிவித்தனர், மேலும் இந்த கலையை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News