மேகங்கள் தழுவும் மேகமலை அருவி !
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பை தொழுப் பகுதியில் சின்ன சுருளி என அழைக்கப்படும் மேகமலை அருவிக்கு மேகமலை வனப்பகுதியில் இருந்து நீர்வரத்து வரும். மேகமலையில் பெய்யும் மழை கம்பம், கூடலூர் பக்கம் உள்ள சுருளி பக்கமும், வருசநாடு பக்கம் உள்ள சின்ன சுருளி பக்கமும் வெள்ளமாக வழிந்து ஓடும். மழைக்காலங்களில் இருபக்கமும் உள்ள அருவியில் சுருளி அருவி, சின்ன சுருளி அருவிகளில் தண்ணீர் வழிந்தோடும் கடந்த சில மாதங்களாக மேகமலை வனப் பகுதியில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக மேகமலை அருவி நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. தேனி மாவட்டத்தில் ஏராளமான அருவிகள் உள்ளது. தற்போது தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு போய் கிடக்கின்றன. முல்லைப் பெரியாற்றிலும் தண்ணீர் மிக மிக குறைவாக வருகிறது. மழை இல்லாமல் வழக்கத்தைவிட வெயில் அதிகமாக இருப்பதால் தேனி மாவட்டம் மக்கள் பரிதவித்து போயிருக்கிறார்கள். எந்த வருடமும் இப்படி ஒரு வெயில் அடித்ததில்லை என்று தேனியில் கூறாதவர்கள இல்லை. கோடை மழையில் அதிக பலன் பெறும் மாவட்டங்களில் தேனியும் ஒன்று. கோடை காலங்களில் மழை காரணமாக ஆறுகளிலும், அருவிகளிலும் நீர் வரத்து அருமையாக இருக்கும். கடந்த முறை அப்படி தான் இருந்தது. இந்த முறை அப்படியே எதிர்மாறாக இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும் என்கிற மாதிரி நம்ம தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் பெய்த மழையில் சின்ன சுருளி அருவிகள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேகமலை பகுதியில் கனமழை பெய்தது இதனால் நேற்று மாலை சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் வரும் நாட்களில் அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேனி மாவட்டம் அல்லாது திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மற்றும் அண்டை நாடுகளான கேரளா பகுதிகளிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அருவியல் நீர்வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பெருமகிழ்ச்சி அடைவார்கள்.