சேலம் மாவட்டமும்! சிறப்புகளும் !

Update: 2024-01-20 09:13 GMT

சேலம் மாவட்டம் - ஏற்காடு 

சேலம் மாவட்டம் பண்டைய நாள்களில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது .சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இம்மாவட்டம் அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான் ,ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது .இவ்வூரில் உள்ள மலையை சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று. அதுபோல "சேரலம் "என்பது சேலம் ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடுஇவ்வூரை "சாலிய சேரமண்டலம்" என குறிப்பிடுகிறது. எனவே சேரலம் என்னும் பெயரை காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரியை தலைநகராகக் கொண்டது பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தை தலைநகராக கொண்டது தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது. 1808 -இல் இ .ஆர் .ஹார் கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போது இது சேலம் மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1830 இல் மாவட்ட தலைநகர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும் கூட, 1860 இல் ஆட்சித் தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1966 இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு புதியதாக தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது .சேலம் என்ற பெயரில் அமெரிக்காவிலும் ,இங்கிலாந்திலும் கூட நகரங்கள் உண்டு .கைத்தறி, வானிலை நிலையங்கள் நிறைந்தது இவ்வூர் .இந்தியாவிலேயே மிகவும் நீளமான பெரிய ரயில்வே பிளாட்பாரம் சேலம் சந்திப்பு நிலைய பிளாட்பாரமே ஆகும். சேலம் நகரத்தில் வாணிக வளத்தை பெருக்கும் இடம் "லீ பஜார் "என்னும் கடைவீதியில் உள்ள மொத்த வியாபார நிலையங்கள் ஆகிய பல்வேறு மண்டிகள் இந்நகரத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகின்ற வாரச்சந்தை வியாபாரம் மிகவும் பெரியதாகும். சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஓமலூர் சாலையில் அமைந்துள்ளது .இங்கு சேர்வராயன் மலையடிவாரத்தில் குரும்ப ப்பட்டி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. ராமகிருஷ்ண மடம், ஸ்ரீ குமரகிரி கோயில் ,கந்தாஸ்ரமம் ,திப்பு சுல்தான் கட்டிய ஜாமா மஸ்ஜித் ,சேலம் ஸ்டீல் உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம். சேலம் மாவட்டம் மாங்கனி நகரம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. சேலம் மாங்கனி வகையில் மல்கோவா மாம்பழம் மிகவும் சிறப்பு பெற்றதாகும் .புதிய வகை கலப்புரக மாம்பழங்கள் புகழ்பெற்றவை. மரவள்ளி கிழங்கு விளைச்சலுக்கும் சேலம் பெயர் பெற்றது. மாங்கனிக்கும் இரும்புக்கும், கனிம பொருள்களுக்கும் பெயர் பெற்றது சேலம் மாவட்டம் ஆகும். மாவட்டத்தில் பெரும்பகுதி செம்மண் மற்றும் கரிசல் மண் வகையைச் சார்ந்தது இங்கு காவிரியும் வெள்ளாறும், வசிட்டா நதியும் ஓடுகின்றன. இம்மாவட்டம் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது கல்வராயன் மலை சேர்வராயன் கஞ்சமலை தீர்த்தமலை ஏற்காடு மலை நைனாமலை கபிலமலை முதலியவை முக்கியமானவை மேக்னசைடு பாக்சைட் கிரானைட் சுண்ணாம்புக்கல் , குவார்ட்ஸ்.மற்றும் இரும்பு தாதுக்கள் அதிகம் காணப்படுகின்றன மேக்னசைட் சுரங்க தொழிற்சாலைகள் சிமெண்ட் தொழிற்சாலைகள் அலுமினியம் உரு க்காலை போன்ற தொழில்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன அதுமட்டுமல்லாமல் சேலம் மாவட்டத்தில் விளையும் வேளாண் பொருட்கள் இந்தியா முழுவதும் சந்தைப்படுத்தப்படுகின்றது.

சேலம் உருக்காலை

சேலம் பல்வேறு கனிம வளங்கள் நிறைந்த இடமாகும் இங்கு கிடைக்கும் இரும்பு தாதுவை பயன்படுத்தி ஸ்டீல் உற்பத்தி செய்வதற்கு இந்திய நடுவன அரசின் செயில் நிறுவனம் சேலம் இரும்பாலையை அமைத்துள்ளது இது தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு உருக்காலையாகும். இந்தியாவில் மேக்னசைட் தாது பெருமளவு கிடைக்கும் இடங்களில் சேலமும் ஒன்று. டால்மியா மற்றும் தமிழக அரசின் டானமாங் நிறுவனங்கள் மேக்னசைட் சுரங்கங்களை இங்கு அமைத்துள்ளன .அதிக அளவில் வெள்ளிஆபரணங்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது. இது தவிர நூற்பாலைகள், வாகன உதிரிபாக ஆலைகள், சேகோ ஆலைகள்,(சவ்வரிசி) போன்ற ஆலைகளும் உள்ளன.

Tags:    

Similar News