ஜாலியா சுத்த சாத்தனூர் டேம் போலாமே !
திருவண்ணாமலை பகுதிக்கு நீர் பாசனம் பற்றாத காரணத்தால், சாத்தனூர் நீர்த்தேக்க திட்டம் 1949 இல் உருவானது. இந்த அணை முதல் ஐந்தாண்டு திட்ட காலத்தில் தொடங்கப்பட்டு 1958ல் முடிவு பெற்றது.
119 அடி கொள்ளளவு உள்ள சாத்தனூர் அணை செங்கம் வட்டத்தில் சாத்தனூர் கிராமத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது .இதற்கு சுமார் நான்கு மைல் கீழே கட்டப்பட்டிருக்கும் கசிவு நீரை தேக்கும் அணை கட்டு பகுதியிலிருந்து கால்வாய்கள் வெட்டப்பட்டு பாசன வசதிக்கு பயன்படுத்தப்படுகிறது.
1955 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு 1956 மே மாதத்தில் முடிக்கப்பட்ட இந் நீர் தேக்கத்தில் மொத்த நீளம் 2583 அடி. உயரம் 147 அடி . இதில் 1400 அடி கட்டடப்பகுதி. 1183 அடி மண் அணை பகுதி .நடுவில் 432 அடி மடை உள்ளது.
அதில் ஒன்பது கண்கள் உண்டு .ஒவ்வொரு கண்ணின் அகலமும் 40 அடி. இதில் 46 ஆயிரம் லட்சம் கனஅடி முதல் 81 ஆயிரம் லட்சம் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.இக்கால் வாயின் முதல் ஆறு மைல்களுக்குள் 6 பாலங்களும் ,ஒரு பெரிய நீர்க்குழாயும்,இரண்டு நடை பாலங்களும் ,இரண்டு மேம்பாலங்களும், 11 சுரங்க வழிகளும் கட்டப்பட்டுள்ளன .ஆறு மைல்களுக்கு அப்பால் மூன்று பாலங்களும் எட்டு சுரங்க வழிகளும் கட்டப்பட்டுள்ளன இவ்வனை இம்மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக கருதப்படுகிறது.