சுற்றி சுழலும் சுருளி அருவி!

Update: 2024-04-03 11:56 GMT

சுருளி அருவி 

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சுருளி அருவி இயற்கை அழகும் குளிர்ச்சியும் மனதை மயக்கும் பேரழகும் கொண்ட சுற்றுலாத் தலமாகும் .இந்த அருவி இருக்கும் இடம் ஆனது பசுமை நிறைந்த அழகிய வனப்பகுதி அமைந்திருப்பதால் இந்த பயணம் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் கொடுக்கும். இந்த நீர்வீழ்ச்சி தேனியில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .சுருளி நீர்வீழ்ச்சிகளில் கொண்டாடப்படும் கோடை விழாவில் நன்கு திட்டமிட்டு கலந்து கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும். இது அழகிய மேகமலையிலிருந்து உருவானது இங்கு பாதுகாப்பாக குளிக்கும் இடம் நன்கு பராமரிக்கப்பட்ட அறைகளும் உள்ளது இந்த இடம் வயதானவர்களையும் மற்றும் குழந்தைகளுக்கும் ஏதுவானதாகவும் இருக்கும்.ஜூன், அக்டோபர் மாதங்களில் நீங்கள் இந்த இடத்தை பார்வையிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அதிக மழைக்காலங்களில் இந்த இடம் பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்காது .இந்த அருவியானது வனத்துறையில் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாதுகாப்பு கருதி நீர்வரத்து அதிகரிக்கும் நேரத்தில் குளிக்க தடை விதிக்கப்படும் எனவே இங்கு வரும் முன்னர் நீர்வரத்து நிலவரத்தை தெரிந்து கொண்டு வந்து மகிழ்ச்சியாக குளித்து உற்சாகத்துடன் திரும்புங்கள்.

Tags:    

Similar News