தஞ்சை பெரிய கோயில்
தஞ்சாவூரில் உள்ள சோழநாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோவிலாகும்.. இக்கோயில் உலக பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.. பொ. ஊ பத்தாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தமிழ் பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோவிலை கட்டினார்.. இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்கள் கோயிலில் ஒன்றாகும்... இக்கோவில் விமானத்தின் உயரம் 216 அடி 166 மீட்டர் உயரம் கொண்டது.. இத்தகைய பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1003 க்கும் 1010 ஆம் ஆண்டிற்கும் சோழ மன்னனான இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் திராவிட கோயில் கலையின் உன்னதமான சான்றாக கருதப்படுகிறது.. கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு கீழே உள்ள பகுதி ஒரே கல்லால் ஆனது... அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில், தாராசுரம், ஐராவதேசுவரர் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய களப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.