ராஜராஜனின் பிரமாண்டம்... தஞ்சையின் கர்வம்!

Update: 2024-04-05 16:29 GMT

தஞ்சை பெருவுடையார் கோயில் 

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலை இராஜராஜ சோழன் கட்டினார் வரலாற்று ஆசிரியர்களும் கட்டடக்கலை நிபூணர்களும் தங்கள் தேடலின் நிறைவான இடமாக இதை கருதுகிறார்கள் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தின் பெருமை மிகு அடையாளமாக உயர்ந்து நிற்கும் இந்த தஞ்சை பெரிய கோயில் 82 அடி சதுர மேடை ஒன்றை எழுப்பி அதன் மீது 13 அடுக்குக் கொண்ட கோபுரம் ஒன்று இக்கோயிலில் எழுப்பப்பட்டுள்ளது இங்குள்ள கோபுரத்தின் உயரம் 216 அடி வெளிச்சுவரும் விமானத்தின் சுவரும் மேலே ஒன்று சேரும் இடத்தில் 80 டன் எடையுள்ள சதுர கருங்கல்லில் பிரம்மாண்ட தளம் அமைகிறது மிகப்பெரிய உயர்ந்த விமானத்தைக் கொண்ட முதல் கோயில் இதுதான் .கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் விஷ்ணு சம்மந்தமானவையாகவும், கோயில் உள்ள சிற்பங்கள் சிவன் சம்பந்தமானவையாகவும் உள்ளன. கோபுரத்தின் சிகரத்தில் இருப்பத்தைந்தரை அடி நீளம் அகலம் உள்ள 81 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கிய மகுடம் உள்ளது. திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளை சிற்ப வடிவிலும் சித்திரங்களாகவும் அழியா நிலையில் நிலைப்படுத்திய திருக்கோயில் இதுதான் .ஆடல்கலை, நாடகக்கலை சிற்பக்கலை சித்திரக்கலை கட்டிடக்கலை முதலான கலைகளை வளர்த்த இக்கோயிலில் வேலை செய்த கணக்கர்கள் இசையாளர்கள் நாட்டியமாடுபவர்கள் பாட்டு பாடுபவர்கள் வீணை வாசிப்பவர்கள் உடுக்கை அடிப்பவர்கள் பக்கவாத்தியம் இசை ப்போர் என அனைத்து தரப்பினரின் பெயர்களையும் பொறித்துள்ளனர் .தஞ்சை பெரிய கோயிலை அடுத்து தஞ்சையில் உள்ள அரண்மனை பிரதான கலை சின்னமாக விளங்குகிறது தஞ்சை அரண்மனை சுமார் 530 ஏக்கரில் அமைந்துள்ளது அரண்மனை வளாகத்தில் கலையம்சம் பொருந்திய கலைக்கூடம் உலகம் போற்றும் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் சங்கீத மகால் ஆகியவை பழங்கால பெருமைகளை எடுத்துக் கூறுவதாக உள்ளன. உலக புகழ்பெற்ற அறிவு களஞ்சியமாகவும் அரிய பொருட்களஞ்சியமாகவும் கல்வி கோயிலாகவும் திகழ்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெருமளவிற்கு வருகின்ற பார்வையாளர்களை கவர்ந்து வரும் பெருமைமிக்க நூலகமாக இது விளங்குகிறது இங்கு காணப்படும் கலை நுட்ப வேலைப்பாடுகளையும், மதிப்புமிக்க பழமையான புத்தகங்களையும் பனை ஓலைகளையும் தாள் சுவடிகளையும் கொண்டது இந்த நூலகம். சரபோஜி மன்னர் பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை கொண்டு வந்து அழகிய பீரோக்களை தயாரித்து அவைகளில் தான் சேகரித்த அரிய நூல்களை பத்திரப்படுத்தினார். விஞ்ஞான வசதி இல்லாத அந்த காலத்தில் அரங்கில் வீணையை மீட்டினால் அதன் மெல்லிய ஓசையை அந்த அரங்கில் எந்த இடத்தில் இருந்தும் அதன் முழு நுட்பத்துடன் கேட்கக்கூடிய இசை அரங்கான சங்கீத மகால் தஞ்சையின் கலை அறிவையும்,இசை அரங்கின் அமைப்பையும் காணலாம்.

Tags:    

Similar News