வேலூர் கோட்டை!
Update: 2024-02-23 10:12 GMT
வேலூர் கோட்டைவேலூரில் புகழுக்கு பெருமை சேர்க்கும் இந்த கோட்டை மிகச்சிறந்த ராணுவ கட்டட கோட்டையாகும் இந்தியாவில் தற்போதுள்ள தரை கோட்டைகளில் சிறந்ததாகவும் அழகிய கலைநயம் மிக்கதுடன் சுற்றிலும் அகழியுடன் கூடிய உறுதியான கோட்டை வேலூர் கோட்டை ஆகும் .இந்த கோட்டைக்குள் தான் வேலூர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு10 - ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் ஆயுதங்கள் 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்த செம்பு போர் வாள்கள் போன்ற அரிய பொருள்கள் இங்கு உள்ளன. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய பீரங்கிகள் மற்றும் வெடி மருந்து குடுவை போன்றவை உள்ளன. இந்த கோட்டையின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் வகையில் 1984 ஆம் ஆண்டு இந்திய அரசு சிறப்பு தபால் தலையை வெளியிட்டது.