குடியுரிமை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு தடை கோரி 22 மாநிலங்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!

குடியுரிமை விவகாரத்தில் டிரம்ப் உத்தரவுக்கு தடை கோரி 22 மாநிலங்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

Update: 2025-01-22 11:14 GMT

Donald Trump

ஜனநாயகக் கட்சிகள் தலைமை வகிக்கும் மாநிலங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் குழுக்கள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த பிறப்புரிமை குடியுரிமையை திரும்பப் பெறும் முயற்சியை எதிர்த்து வழக்குகளை தாக்கல் செய்துள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் டிரம்ப்-இன் எதிரிகள் நீதிமன்றத்தில் அவரது நிகழ்ச்சி நிரலைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த திங்கட்கிழமை பதவியேற்ற பிறகு, குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் தாய் அல்லது தந்தை அமெரிக்க குடிமகனாகவோ அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராகவோ இல்லாவிட்டால் அவர்களின் குடியுரிமையை அங்கீகரிக்க மறுக்குமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். கொலம்பியா மாவட்டம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரத்துடன் இணைந்து 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாநிலங்கள், டிரம்ப் அமெரிக்க அரசியலமைப்பை மீறியதாக பாஸ்டன் மற்றும் சியாட்டிலில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன. இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் குடியிரிமை குறித்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் அவரது நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற போராட்டங்களை எதிர்கொள்ள துவங்கியுள்ளது. டிரம்ப்-இன் உத்தரவுகள் அமலுக்கு வரும் பட்சத்தில், அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிறக்கும் 1.5 லட்சத்திற்கும் அதிக குழந்தைகளுக்கு முதல் முறையாக குடியுரிமை பெறும் உரிமை மறுக்கப்படும் என்று அட்டார்னி ஜெனரல் ஆண்ட்ரியா ஜாய் கேம்பெல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளி மாளிகை தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News