ஐஐடி வடிவமைத்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
Update: 2024-05-30 09:40 GMT
சென்னை ஐஐடி ஸ்டார்ப் அப் நிறுவனமான அக்னிகூல் நிறுவனம் வடிவமைத்த 'அக்னிபான்' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது.
300 கிலோ வரை எடையிலான ஆய்வுக் கலன்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அந்த ராக்கெட் 700 கி.மீ., தொலைவு வரை செல்லக்கூடியது. ஏற்கெனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்தது.
தனியாரால் அனுப்பப்பட்ட இரண்டாவது ராக்கெட் எனும் பெருமையை அக்னிபான் ராக்கெட் பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் அரை கிரையோஜெனிக் இயந்திரத்தை அக்னிபான் ராக்கெட் கொண்டுள்ளது.