ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வந்த இந்தியர் பலி !!

Update: 2024-07-31 06:46 GMT

இந்தியர் பலி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் இந்திய இளைஞர்களை ரஷிய ராணுவத்தில் உதவியாளராக கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது தெரிய வந்தது.

ரஷிய ராணுவம் சார்பில் ராணுவ உதவியாளர்கள் என பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்

போரில் இந்திய இளைஞர்கள் 4 பேர் பலியானார்கள். இதையடுத்து ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை மீட்பதற்கான மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் ஒரு இந்திய வாலிபர் உயிரிழந்துள்ளார். அரியானாவை சேர்ந்த ரவிமவுன் (வயது 22) என்பவர் ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

அவர் உக்ரைன் போரில் பலியாகி உள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணத்தை வெளியுறவு அமைச்சகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.ரவிமவுன் மரணம் குறித்து அவரது சகோதரர் அஜய் மவுனுக்கு இந்திய தூதரகம் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

அதில் ரவிமவுன் மரணத்தை ரஷிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடலை அடையாளம் காண, குடும்பத்தார்கள் டி.என்.ஏ. சோதனை தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியர்களை விடுவிக்க மோடி ரஷிய அதிபர் புதினிடம் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்ட ரஷியா, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News