பங்களாதேஷ் எம்.பி. பகிர் சம்பவம்... தோலை உரித்து, துண்டு துண்டாக வெட்டி கொலை..!

Update: 2024-05-25 07:27 GMT

அன்வருள் ஆசிம் அன்வர்

இந்தியா வந்திருந்த பங்களாதேஷ் எம்.பி. திடீரென மாயமான வழக்கில், உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் பகீர் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவர் அன்வருள் ஆசிம் அன்வர். `அவாமி லீக்’கட்சி எம்.பி ஆவார். மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12-ம் தேதி கொல்கத்தா வந்தார். இவர் அடிக்கடி கொல்கத்தா வருவதும் , நண்பர்களை சந்திப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆனால் கடந்த 17-ம் தேதியில் இருந்து அன்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவரின் நண்பர் பிஸ்வாஸ் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

Advertisement

இந்நிலையில் இவ்வழக்கில் துப்பு துலங்கியது. எம்.பி.அன்வர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்த நிலையில், இக்கொலை தொடர்பாக ஜிகத் ஹவ்லதார்(24) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் மும்பை கசாப் கடையில் பணியாற்றியவர். வங்கதேசத்தை சேர்ந்தவர். சமீபத்தில் ஒரு சிலரால் கொல்கத்தா அழைத்து வரப்பட்டுள்ளார்.

பின்னர், தோலை உரித்து பல துண்டுகளாக வெட்டியுள்ளனர். அதோடு எலும்பை பல துண்டுகளாக உடைத்து தனித்தனியாக பிளாஸ்டிக் பேக்கில் அடைத்து நகரின் பல இடங்களுக்கு சென்று போட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இவருக்கு மூளையாக செயல்பட்ட அக்தர்ருஷ்மான் என்பரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற வங்கதேசத்தவர் ஆவார். கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இவர் எம்.பி.அன்வரின் நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News