இளம் எலிகளின் இரத்தத்தில் இருந்து முதுமையை தடுக்கும் சீன விஞ்ஞானிகள் சாதனை!

Update: 2024-05-06 11:10 GMT

சீன விஞ்ஞானிகள் சாதனை

இளம் எலிகளின் இரத்தத்தில் இருந்து முதுமை ஏற்படாமல் தடுக்கும் (Anti-Aging) இரத்தக் கூறுகளை கண்டுபிடித்து சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 20 மாத வயதான எலிகளின் ஆயுட்காலம் சுமார் 22.7% வரை நீட்டிக்க முடிந்ததாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Nature Aging அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ஆண் எலிகளுக்கு இந்த இரத்தக் கூறுகளை வாராந்திர ஊசி மூலம் செலுத்தியதில், அவைகளின் சராசரி ஆயுட்காலம் 840 நாட்களிலிருந்து 1,031 நாட்களாக அதிகரிக்க முடிந்ததாக கூறப்பட்டுள்ளது.

சுமார் 7 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை, மனிதர்களிடம் பயன்படுத்துவதற்கு முன்பு கூடுதல் ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News