காசாவில் உள்ள ரபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டம் - ரபா நகரை விட்டு 4.50 லட்சம் பேர் வெளியேற்றம் !!
By : King 24x7 Angel
Update: 2024-05-15 07:32 GMT
ரபா நகரம்
இஸ்ரேல் , ஹிமாஸ் இடையிலான போரால் காசாமுனை பேரழிவை சந்தித்துள்ளது. காசாவில் குழந்தைகள் உட்பட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
அதற்கிடையில் லட்சக்கணக்கானோர் தஞ்சமடைந்துள்ள தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
பாலஸ்தீனியர்களின் கடைசி புகலிடமாக உள்ள ராபாவிலிருந்து வெளியேறுமாறு அவர்களை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
இதனை அடுத்து ராபாவிலிருந்து அவர்கள் வெளியேறி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த வாரத்திற்கு குறைந்தது 4.50 இலட்சம் பாலஸ்தீனியர்கள் ராபா நகரிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஐநா தெரிவித்துள்ளது.