இலங்கை பாராளுமன்றம் கலைப்பு; தேர்தல் தேதி அறிவிப்பு!!

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றம் கலைப்பு நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.

Update: 2024-09-25 08:01 GMT

anura kumara dissanayake

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று முன்தினம் இவர் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது. இதில் நள்ளிரவு (நேற்று) முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார். அத்துடன் நவம்பர் மாதம் 14-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார். அனுர குமார திசநாயகா அதிபராக பதவி ஏற்றதும் பாராளுமன்றம் கலைப்பு அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தத நகர்வாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பதவிக்கலாம் 2025 ஆகஸ்ட் வரை உள்ளது. இருந்த போதிலும் 11 மாதங்களுக்கு முன்னதாக நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 38 பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெறத்தேவையான 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை யாரும் பெறாததால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் நீண்ட இழுபறிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக (வயது 56) வெற்றி பெற்றார். இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமார திசநாயகா நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனை தொடர்ந்து இலங்கையின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெண் தலைவரான ஹரினி அமரசூரியாவை அதிபர் அனுரா குமார திசநாயகா நியமதித்தார். இதையடுத்து, அவர் இலங்கை பிரதமராக நேற்று பதவியேற்றார். இதன் மூலம் இலங்கை வரலாற்றில் 3-வது பெண் பிரதமர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 54 வயதான ஹரினி அமரசூரியா சமூக ஆர்வலர், பல்கலைக்கழக பேராசிரியர், அரசியல் தலைவர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார். பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹரினி அமரசூரியாவுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் எம்.பி.க்களான விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுனாராச்சி ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவியேற்றனர்.

Tags:    

Similar News