நிலவின் வெப்பநிலை வெளியானது
Update: 2023-08-28 11:23 GMT
நிலவின் தென்துருவ மேற்பரப்பின் வெப்பநிலை அதிகபட்சமாக 70 டிகிரி செல்சியஸ் வரை உள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இஸ்ரோ செலுத்திய 'விக்ரம்' லேண்டா் நிலவின் மேற்பரப்பு மற்றும் அடிப்பரப்பு வெப்பநிலைகளை ஆய்வு செய்தது. அதன்படி, தரைக்கு கீழே 8 செ.மீ. ஆழத்தில் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ், 4 செ.மீ. ஆழத்தில் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 2 செ.மீ. ஆழத்தில் 40 டிகிரி செல்சியஸாக உள்ளது.