999சிசி என்ஜின் கொண்ட பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடல் இந்தியாவில் அறிமுகம் !!

999சிசி என்ஜின் கொண்ட பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடல் இந்தியாவில் அறிமுகம் !!

பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடல்

பி.எம்.டபிள்யூ. மோட்டராட் இந்தியா நிறுவனம் புதிய M 1000 XR சூப்பர் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

புதிய பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடலில் விசேஷமான ஹை-கிளாஸ் பிளாக் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது பைக்கின் ஹை-கிலாஸ் கார்பன் ஃபைபர் பேனல்களுக்கு முரணாக காட்சியளிக்கிறது.

இதுதவிர இந்த பைக்கின் ஒட்டுமொத்த தோற்றமும் கவனம் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கும் பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடலில் ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லைட்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள், சிறிய வின்ட்ஸ்கிரீன், பின்புறம் கிராப் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளது.

பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடலில் 999சிசி, இன் லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 201 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த பைக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். மேலும், மணிக்க்கு அதிகபட்சம் 278 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

பி.எம்.டபிள்யூ.-வின் முற்றிலும் புதிய சூப்பர் பைக் மாடல்- ரோட், டைனமிக், ரேஸ் மற்றும் ரேஸ் ப்ரோ போன்ற நான்கு ரைட் மோட்களை கொண்டுள்ளது.

இதோடு டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த சூப்பர் பைக்கில் 6.5 இன்ச் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

M 1000 XR மாடலின் விலை ரூ. 45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags

Next Story