இந்தியாவில் SUV காரில் பாதுகாப்பானது எது தெரியுமா !!

இந்தியாவில் SUV காரில் பாதுகாப்பானது எது தெரியுமா !!

SUV  கார்

சமீப ஆண்டுகளாக இந்தியாவில் SUV கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பான SUV கார் எது தெரியுமா? டாடா சஃபாரியும் டாடா ஹேரியர் காரும் தான். இந்த இரண்டு கார்களுமே ஒரே ரேட்டிங்கைப் பெற்றுள்ளதோடு மேலே குறிப்பிட்ட மற்ற SUV கார்களை விட பாதுகாப்பில் அதிக ரேட்டிங்கை பெற்றுள்ளது. டாடா சஃபாரியும் டாடா ஹேரியரும் OMEGARC உள்கட்டமைப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது லேண்ட் ரோவர் (Land Rover) D8 பிளாட்ஃபார்மிலிருந்து பெறபட்டதாகும். இந்தக் கார்களில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) போன்றவை அடிப்படை வசதிகளாக உள்ளது.

பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் என இரண்டு பிரிவினர் பயணம் செய்யும் போதும் சர்வதேச NCAP ரேட்டிங்கில் டாடா சஃபாரி மற்றும் ஹேரியர் கார்கள் ஐந்து நட்சத்திர ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த இரண்டு SUV கார்களுமே பெரியவர்கள் பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 33.05 புள்ளிகளும் சிறுவர் பாதுகாப்பில் மொத்தம் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளும் பெற்று முதலிடத்தை வகிக்கின்றன. அதுமட்டுமின்றி நம்நாட்டின் பாரத் NCAP ரேட்டிங்கிலும் இந்த இரண்டு கார்களும் ஐந்து நட்சத்திர மதிப்பீடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா சஃபாரி காரின் விலை ரூ.16.19 லட்சம் முதல் ரூ.27.34 லட்சம் வரை உள்ளது. அதேப்போல் டாடா ஹேரியரின் விலை ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.44 லட்சம் வரையில் உள்ளது. இந்த இரண்டு SUV கார்களுமே ஒரேப்போன்ற க்ரியோடெக் 2.0 லிட்டர் டீசல் இஞ்சினைப் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 170PS பவரையும் 350Nm இழுவிசையும் கொண்டுள்ளது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸீபிடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

Tags

Next Story