ஹூண்டாய் நிறுவனம் 2024 மாதத்தின் கார் விற்பனை தகவல் வெளியிட்டுள்ளது.....

ஹூண்டாய் நிறுவனம் 2024 மாதத்தின் கார் விற்பனை தகவல் வெளியிட்டுள்ளது.....

ஹூண்டாய்

பட்ஜெட் விலையில் பல ஆப்ஷன்களுடன் கார்களை தயாரித்து விற்பனை செய்துவரும் கொரிய நிறுவனமான ஹூண்டாய், தங்களின் பிப்ரவரி 2024 மாதத்தின் கார் விற்பனை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் மொத்தம் 60501 கார்களை பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது நிறுவனத்தின் 6.8% வளர்ச்சி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

உள்நாட்டில் மட்டும் நிறுவனம் 50201 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே, உள்நாட்டில் தயாரித்து வெளிநாட்டிற்கு 10300 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி மாதத்தின் இந்த மொத்த விற்பனையில் கிரெட்டா மாடல் கார்கள் மட்டும் 15 ஆயிரத்து 276 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது. 2015 அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இதுவே கிரெட்டா கார்கள் விற்பனையில் புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story