ஹோண்டா நிறுவனம் அறிமுகம் ! CB125R

ஹோண்டா நிறுவனம் அறிமுகம் ! CB125R

ஹோண்டா 

ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட CB125R மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

முந்தைய வெர்ஷனுடன் ஒப்பிடும் போது இந்த மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் கணிசமான அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி முற்றிலும் புதிய CB125R மாடலில் 5 இன்ச் அளவில் கலர் TFT ன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிது. இந்த யூனிட் CB1000R மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதனை முற்றிலும் புதிய ஸ்விட்ச் கியர் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

மேம்பட்ட ஹோண்டா CB125R மோட்டார்சைக்கிள் மேட் சைனோஸ் கிரே மெட்டாலிக், பியல் கூல் வைட், பியல் கூல் வைட், ரீஃப் சீ புளூ மெட்டாலிக் மற்றும் பியல் ஸ்பிலெண்டர் ரெட் என்று நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.

2024 ஹோண்டா CB125R மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 15 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இத்துடன் ஷோவா எஸ்.எஃப்.எஃப். முன்புற ஃபோர்க்குகள், நான்கு பிஸ்டன்கள் கொண்ட கேலிப்பர்கள், 296mm முன்புற டிஸ்க் பிரேக், IMU மூலம் கட்டுப்படுத்தப்படும் லீன் சென்சிடிவ் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. 2024 ஹோண்டா CB125R மாடலின் விலை தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படலாம்.

இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதும் சாத்தியமற்றதாக தெரிகிறது.

Tags

Next Story