கவாசகி W175 ஸ்டிரீட் இந்தியாவில் அறிமுகம்

கவாசகி W175 ஸ்டிரீட் இந்தியாவில் அறிமுகம்

கவாசகி W175 ஸ்டிரீட்

கவாசகி நிறுவனம் தனது குறைந்த விலை மோட்டார்சைக்கிளின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. W175 ஸ்டிரீட் என அழைக்கப்படும் புதிய கவாசகி பைக்கின் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கவாசகி W175 ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 12 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

புதிய கவாசகி W175 ஸ்டிரீட் மாடலில் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் வயர் ஸ்போக் வீல்கள் மற்றும் டியூப் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு மாடல்களின் வீல்கள் மற்றும் டயர்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய ஸ்டிரீட் மாடலின் சீட் உயரம், கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் வீல்பேஸ் உள்ளிட்டவைகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கவாசகி W175 ஸ்டிரீட் மாடலிலும் 177சிசி, ஏர் கூல்டு சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 13 ஹெச்.பி. பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலிலும் ஹாலோஜன் ஹெட்லைட் உள்ளது. புதிய கவாசகி W175 ஸ்டிரீட் மாடலின் தற்போதைய விலை அறிமுக சலுகையாகவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த விலை எத்தனை யூனிட்களுக்கு பொருந்தும், எவ்வளவு காலத்திற்கு பொருந்தும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இதேபோன்று இந்த மாடலின் முன்பதிவு மற்றும் வினியோகம் எப்போது துவங்கும் என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை.

Tags

Read MoreRead Less
Next Story