EV கார்களை தயாரிக்க இந்தியாவில் தொழிற்சாலையா? கியா நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ந்து போன போட்டி நிறுவனங்கள்!!

EV கார்களை தயாரிக்க இந்தியாவில் தொழிற்சாலையா? கியா நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ந்து போன போட்டி நிறுவனங்கள்!!

kia ev car

எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் கியா நிறுவனத்தின் திட்டத்தை அறிந்த போட்டி நிறுவனங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தென் கொரியாவை சேர்ந்த கார் நிறுவனங்களில் ஒன்றான கியா ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. ஆந்திராவில் கியா நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் மேலும் ஒரு புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கியா நிறுவனம் ஏற்கனவே ஒரு எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அது கியா Kia EV6 ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 60.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 65.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. காரணாம் இந்த காரின் விலை அதிகமாக இருப்பதே. இதற்கிடையே கியா நிறுவனத்தின் அறிவிப்புப்படி இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து, எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கினால், விலை குறைவான தயாரிப்புகளை எதிர்பார்க்கலாம். இதற்காக அந்நிறுவனம் உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய மொத்தம் 8 தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story