மாருதி சுசுகி நிறுவனம் களமிறக்கும் புதிய ஸ்விப்ட் மாடல் கார்!!!!

மாருதி சுசுகி நிறுவனம் களமிறக்கும் புதிய ஸ்விப்ட் மாடல் கார்!!!!

ஸ்விப்ட் மாடல் கார்

மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்விப்ட் மாடல் YED எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய மாடலில் அதன் முந்தைய வெர்ஷனில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடல் கார் ஏற்கனவே ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த கார் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிரெஸ்ஸா மாடல்களை போன்ற இன்டீரியர் புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்ப்புகள் உள்ளது.

சர்வதேச சந்தையில் புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், 16 இன்ச் அலாய் வீல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கும் வசதி கொண்ட விங் மிரர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், டயர் பிரெஷர் மாணிட்டர், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி, ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ADAS போன்ற அம்சங்கள், லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் டிபாச்சர் வார்னிங் போன்ற அம்சங்கள் உள்ளன என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story