இந்தியாவில் அறிமுகமான Mini Countryman எலக்ட்ரிக் கார் !!

இந்தியாவில் அறிமுகமான Mini Countryman எலக்ட்ரிக் கார் !!

Mini Countryman எலக்ட்ரிக் கார் 

இந்தியாவில் Countryman SUV-ன் முழு எலக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாகியுள்ளது. முந்தைய மாடலில் இருந்ததை விட Countryman எலக்ட்ரிக் காரில் பல குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை செய்துள்ளனர். DRL கோடுகளுடன் புதிய வடிவத்தில் ஹெட்லைட் உள்ளது. காரின் முன்பக்கம் எண்கோண வடிவில் க்ரில் அமைப்பு உள்ளது. இதில் தான் சார்ஜிங் போர்ட் உள்ளது.

டூயல் டோன் பெயிண்ட், ஃப்ளஷ் கைப்பிடி எனப் பல அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த Countryman எலக்ட்ரிக் கார் 9 வண்ணங்களில் கிடைக்கிறது.காரின் டாஷ்போர்டில் 9.5 இன்ச் தொடுதிரை OLED இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே உள்ளது. வழக்கமான இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்டருக்குப் பதில் இந்த எலக்ட்ரிக் காரில் ஹெட் அப் டிஸ்பிளே உள்ளது.

அழகியல் பூர்வமான லைட்டிங், பனோராமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ ஹர்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம், செல்ஃபி எடுப்பதற்கு வசதியாக மீனின் கண்கள் போன்ற கேமரா போன்றவை உள்ளது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, பிரேக் அசிஸ்ட், டைனமிக் ஸ்டபிலிட்டி கன்ட்ரோல், க்ராஷ் சென்ஸார், ஆண்டிலாக் பிரேக் சிஸ்டம் வளைவுகளில் பிரேக் கண்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, டயர் பிரஷர் இன்டிகேட்டர் ஆகியவை உள்ளது.

இது அதிகபட்சமாக 201 bhp பவரையும் 250 Nm இழுவிசையும் கொண்டுள்ளது. ஜீரோவிலிருந்து 100கி.மீ வேகத்தை வெறும் 8.6 நொடிகளில் அடைந்துவிடுகிறது. இந்த எலக்ட்ரிக் காரில் 66.45 kWh திறனுள்ள பேட்டரி உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் எந்தவித தடங்கலும் இன்றி 462கி.மீ தூரம் வரை செல்ல முடியும்.இந்தக் காரின் விலை ரூ.54.90 லட்சமாகும்.

Tags

Next Story