அறிமுகமாகிறது ஒகாயா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்… இவ்வளவு சிறப்பம்சங்களா?
okaya electric scooter
மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஒகாயா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
ஒகாயா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாளை (அக்.17) விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஒகாயா மோட்டோ ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ முதல் 135 கிமீ தூரம் வரை செல்லலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ முதல் 70 கிமீ என கூறப்படுகின்றது.
சிறப்பம்சங்கள்:-
- இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சையன், பிளாக், கிரீன், ரெட் மற்றும் கிரே ஆகிய ஐந்து விதமான தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும்.
- அதேநேரத்தில், ட்யூப்லெஸ் டயர், அலாய் வீல் ஆகியவையும் ஒகாயா மோட்டோ ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட இருக்கின்றன.
- 7 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட திரை, எல்இடி லைட் மற்றும் எல்இடி இன்டிகேட்டர் ஆகிய அம்சங்களும் இதில் கொடுக்கப்பட இருக்கின்றன.
- முன் வீலில் டிஸ்க் பிரேக்கும், பின் வீலில் டிரம் பிரேக் வசதியும் வழங்கப்பட இருக்கின்றது.
- சஸ்பென்ஷனைப் பொருத்த வரை இந்தியாவின் கரடு-முரடான சாலைகளுக்கு ஏற்றவையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
- முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
Next Story