ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் !!!
ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஏத்தர் கம்யூனிட்டி டே 2024 நிகழ்ச்சியில் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
இந்த ஸ்கூட்டர் இரண்டு மாடல்கள் மற்றும் ஏழு வெவ்வேறு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
புதிய ஏத்தர் ரிஸ்டா மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஏத்தர் ரிஸ்டா S மாடல் மூன்று மோனோடோன் நிறங்களிலும், ரிஸ்டா Z ஏழு நிறங்கள்- மூன்று மோனோடோன், நான்கு டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மோனோடோனில் பாங்காங் புளூ, சியாசென் வைட் மற்றும் டெக்கான் கிரே ஆப்ஷன்களும், டூயல் டோனில் பாங்காங் புளூ-வைட், கார்டமம் கிரீன்-வைட், அல்போன்சே எல்லோ-வைட் போன்ற மூன்று ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஏத்தர் ரிஸ்டா மாடலில் PMSM எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ரிஸ்டா S மற்றும் ரிஸ்டா Z வேரிண்ட்களில் முறையே 2.9 கிலோவாட் ஹவர் மற்றும் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
123 மற்றும் 160 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.