இந்தியா நிறுவனமான மாருதி சுஸுகி யின் லாபம் எவ்வளவாக இருக்கும் ?
மாருதி சுஸுகி
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் டிசம்பர் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்தை விட சிறப்பான லாபத்தை பெற்றுள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 3,130 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 33 சதவீதம் அதிக அளவில் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.2,351.3 கோடியாக இருந்தது. நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பாளரின் வருவாய் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.29,044.3 கோடியிலிருந்து
15 சதவீதம் அதிகரித்து ரூ.33,309.7 கோடியாக உள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவு குறித்து ஏழு தரகு நிறுவனங்களின் சராசரி மதிப்பீட்டின்படி, MSIL லாபம் 21 சதவீதம் அதிகரித்து ரூ.2,838 கோடியாக இருந்தது. இதன் வருவாய் ஆண்டுக்கு 15 சதவீதம் உயர்ந்து ரூ.33,385 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகியின் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகைக்கு முந்தைய வருவாய் (EBITDA) ஆண்டுக்கு 38 சதவீதம் அதிகரித்து ரூ.2,833 கோடியிலிருந்து ரூ.3,909 கோடியாக உள்ளது என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 501,207 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக MSIL தெரிவித்துள்ளனர். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 465,911 யூனிட்களில் இருந்து 7.57 சதவீதம் வளர்ச்சியை செய்து உள்ளது. இந்த காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 61,982 யூனிட்களை 15.8 சதவீதம் அதிகரித்து 71,785 யூனிட் கார்களை உற்பத்தி செய்து உள்ளது.