அஜ்மானில் இந்திய குடியரசு தின விழா

அஜ்மானில் இந்திய குடியரசு தின விழா

அஜ்மான் இந்திய சங்கத்தில் இந்தியாவின் 75வது குடியரசு தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய சங்க தலைவர் அப்துல் சலா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ரூப் சித்து வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய துணைத் தூதரக அதிகாரி பிஜேந்தர் சிங் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் உரையை வாசித்தார். இந்திய பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில் நிர்வாகக் குழு தலைவர் அப்தாப் இப்ராஹிம், சாயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story