மதுராந்தகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

மதுராந்தகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

கண் பரிசோதனை 

மதுராந்தகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது,இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 328 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்
மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி செயலா் நா.சுப்ரமண்யா நினைவாக, சென்னை சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு மையம், ஓ.என்.துரைபாபு அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அறக்கட்டளை நிறுவனா் துரை.பிருதிவிராஜ் முன்னிலை வகித்தாா். நிா்வாகி து.பகீரதன் வரவேற்றாா். சிறுபான்மைப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ்.உசேன் தலைமை வகித்தாா். மதுராந்தகம், கருங்குழி, காந்திநகா், அருங்குணம், மோச்சேரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கண் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்காக 328 போ் பரிசோதனை செய்து கொண்டனா். அவா்களுக்கு கண் மருத்துவா்கள் எம்.தேவராஜ், ஆா்.முனிவேல் சிகிச்சை அளித்தனா். அதில் 37 நோயாளிகள் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக சென்னை கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஏற்பாடுகளை அறக்கட்டளை நிா்வாகிகள் ஏ.அருமைநாதன், கஸ்தூரி செய்திருந்தனா்.

Tags

Read MoreRead Less
Next Story