பெட்ரோல் பங்கில் திருடிய 2 சிறுவர்கள் கைது

பெட்ரோல் பங்கில் திருடிய 2 சிறுவர்கள் கைது

கோப்பு படம்


ராஜாக்கமங்கலம் அருகே எறும்பகாட்டில் ரத்தினதங்கம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு 7 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 4 பேர் பகலிலும் 3 பேர் இரவிலும் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் விற்ற ரூ.20 ஆயிரத்தை விஸ்வநாதன் தனது தலையணையின் அடிப்பகுதியில் வைத்து விட்டு இரவு சுமார் 11 மணிக்கு தூங்கி னார். அப்போது ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த 17 வயது சிறுவனும், புன்னைநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனும் பெட்ரோல் போடுவது போல் வந்து விஸ்வநாதனின் தலையணை அடியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.

விஸ்வநாதன் கண் விழித்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக் .கப்பட்டு இருப்பதை பார்த்து பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு தகவல் அளித்தார். இச்சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படையினர் பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற 2 சிறுவர்களையும் கைது செய்தனர்.

பெட்ரோல் பங்கில் திருடுவதற்கு முன்னதாக இருவரும் தாராவிளை மகேஷ் (வயது 45) என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், புஷ்ப ஆண்டனி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் திருடியதை ஒப்புக்கொண்டனர். வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவில் சிறார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story