ஆந்திராவிலிருந்து கள்ளச் சாராயம் கடத்தல்
ஆந்திராவிலிருந்து கள்ளச் சாராயம் கடத்தி வந்தவர் கைது
ஆந்திராவிலிருந்து கள்ளச் சாராயம் கடத்தி வந்தவர் கைது
ஆர்கே பேட்டை, அக்.3: திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையார் குப்பத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஏரோமியாஸ் அந்தோணி ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவரை மடக்கி சோதனை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதைத் தொடர்ந்து அவரை தீவிரமாக சோதனை செய்ததில் அவரிடம் 10 லிட்டர் கள்ள சாராயம் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்ன பையன் என்பவரது மகன் ராமச்சந்திரன் (35) என்பதும், ஆந்திராவிலிருந்து கள்ள சாராயத்தை கடத்தி வந்து அதனை திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்ய இருப்பதும் தெரியவந்தது. மேலும் இன்று காந்தி ஜெயந்தி தினம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் கள்ளச் சாராயத்தை அதிக விலைக்கு விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரிந்தது.
இதனையடுத்து ராமச்சந்திரன் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்