ஓசூரில் 2 பேர் வெட்டிக்கொலை : தலையை துண்டித்து தெருவில் வீச்சு

ஓசூரில் 2 பேர் வெட்டிக்கொலை : தலையை துண்டித்து தெருவில் வீச்சு

போலீசார் விசாரணை 

ஓசூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முன்னாள் நிர்வாகி உட்பட 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். தலையை துண்டித்து தெருவில் வீசி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓசூரில் முன் விரோதம் காரணமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் முன்னாள் நிர்வாகி உட்பட இரண்டு பேரை 15 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது இதில் ஒருவரின் தலையை துண்டித்த கும்பல் தெருவில் வீசி சென்றது .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் பிஸ்மில்லா நகர் பகுதியை சேர்ந்தவர் பர்க்கத் (31) இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் முன்னாள் ஓசூர் நகர தலைவராக இருந்தார். இவரது நண்பர் ஓசூர் பழைய வசந்த நகர் பகுதியை சேர்ந்த பொன்வண்ணன் என்ற சிவா (27) இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் முன்னாள் உறுப்பினராக இருந்தார். இவர்கள் இருவரது நண்பர் பக்கா என்கிற பிரகாஷ், இவர் ஓசூர் பார்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் 3 பேர் மீதும் ஓசூர் நகர காவல் நிலையங்களில் அடிதடி வழிப்பறி திருட்டு மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் உள்ளது.

இதில் பக்கா பிரகாஷ் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வழிப்பறி அடிதடி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று பெயிலில் விடுதலையான நிலையில் அவரை அவரது நண்பர்களான பர்கத் மற்றும் பொன்வண்ணன் என்ற சிவா ஆகிய இருவரும் காரில் சென்று ஓசூருக்கு அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த இவர்களது விரோதிகள் மூன்று பேரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் பக்கா பிரகாஷ் வீடு உள்ள பார்வதி நகர் பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். அதனை மர்ம கும்பல் அறிந்து அவர்களது பின்னால் சென்றுள்ளனர்.

பக்கா பிரகாஷை வீட்டிற்குள் அனுப்பி விட்டு பொன்வண்ணனும் பர்க்கத்தும் அங்குள்ள தெருவில் நடந்து வந்துள்ளனர். அப்போது 15க்கும் மேற்பட்ட கும்பல் இருவரையும் சராசரியாக தாக்கியுள்ளது இதில் பொன்வண்ணனின் தலையை வெட்டிய அந்த கும்பல் தெருவில் வீசி உள்ளனர். பர்க்கத்தை அந்த கும்பல் துரத்தி சென்றுள்ளனர். இவர்களது அலரல் சத்தம் கேட்ட வீட்டிலிருந்த பக்கா பிரகாஷ் வீட்டின் சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடி உள்ளார். உயிர் பிழைக்க நினைத்த பர்கத், பக்கா பிரகாஷின் வீட்டிற்குள் நுழைந்து கதவு மற்றும் ஜன்னல்களை பூட்டியுள்ளார் ஆனால் அந்த கும்பல் கதவு, ஜன்னல் மற்றும் மேற்கூரை ஆஸ்படாசீட் ஆகியவற்றை உடைத்து வீட்டுக்குள் சென்று பர்க்கத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் கும்பலிடம் இருந்து உயிர் தப்பித்த பக்கா பிரகாஷ் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து அறிந்த ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் மற்றும் ஓசூர் நகர காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவு நடந்த இந்த இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

Tags

Next Story