செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு

செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு

காவல் நிலையம்

செந்துறை அருகே ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

செந்துறை அடுத்த சிறுகடம்பூர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் மகன் தமிழரசன்(60). ஓய்வுப் பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர், நெஞ்சுவலி காரணமாக தனது வீட்டை பூட்டி வீட்டு, திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு தமிழரசன் வீட்டுக்குச் சென்ற அவரது சித்தி புவனேஸ்வரி, மின்விளக்கை எறியவிட்டுட்டு வீட்டை பூட்டிச் சென்றார்.

பின்னர் அவர் இரவு 10.45 மணிக்கு விளக்கை அணைக்கச் சென்ற போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 22 பவுன் நகைகள், ரூ.30,000 ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story