ரூ.45 லட்சம் மதிப்பிலான 348 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

செல்போன்கள் ஒப்படைப்பு
மதுரையில் காணாமல் போன 45 லட்சம் மதிப்பிலான 348 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உத்தரவின் பேரில் மதுரை மாநகரில் திருட்டு மற்றும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரை மாநகரில் சைபர் கிரைம் போலீசார் செல்போன் திருட்டு வழிப்பறி மற்றும் காணாமல் போன செல்போன்களை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உரிய முறையில் செல்போன்களை மீட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 348 செல்போன்கள் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு மதுரை மாநகர சைவர்கள் போலீசார் உதவியுடன் 348 செல்போன்கள் குறிப்பாக தெற்கு வாசல், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திடீர் நகர், திலகர் திடல்,செல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களால் காணாமல் போன 348 மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட செல்போன்களை மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உரியவர்களிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் மதுரை மாநகர துணை ஆணையர் தெற்கு வடக்கு மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் செல்போன்களை பறிகொடுத்தவர்கள் மதுரை மாநகர காவல் ஆணையாளரிடம் பெற்றுக் கொண்டு மதுரை மாநகர காவல் துறையினருக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
