செம்மண் கடத்திய 6 பேர் கைது

செம்மண் கடத்திய 6 பேர் கைது. அவா்களிடம் இருந்து. 2 பொக்லைன் 4 டிராக்டர்கள் பறிமுதல்
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே, உள்ள இருளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சொந்தமான நிலத்தில் செம்மண் கடத்துவதாக இருளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கதிரவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், நேற்று இரவு கிராம அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு,2 பொக்லைனில், செம்மண் அள்ளி,அதை 4 டிராக்டர்களில் கொட்டி கொண்டிருந்தனர். உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கதிரவன், அ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் விரைந்து வந்த போலீசார், 2 பொக்லைன் 4 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர்கள் செட்ரப்பட்டியை சேர்ந்த சூர்யா (28), கொலகம்பட்டியை சேர்ந்த ராபின் (23), மாவேரிப்பட்டியை சேர்ந்த வடிவேல் (38), தென்கரைகோட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி(44), முத்தானூரை சேர்ந்த அஜித் (25), கோனாம்பட்டியை சேர்ந்த அஜித்குமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய வெங்கடேசனை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த வாகனங்களை பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story