95 சதவீதம் நகைகள் மீட்பு - காவல் துணை ஆணையர் சந்தீஷ் தகவல்

95 சதவீதம் நகைகள் மீட்பு - காவல் துணை ஆணையர் சந்தீஷ் தகவல்

நகைக்கடை கொள்ளையில் 95 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது என காவல் துணை ஆணையர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்

நகைக்கடை கொள்ளையில் 95 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது என காவல் துணை ஆணையர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்
கோவை:ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக துணை ஆணையர் சந்தீஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கோவை காந்திபுரத்தில் 28ம் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் 4.8 கிலோ தங்கம்,பிளாட்டினம்,வைரம் நகைகள் கொள்கையடிக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் விஜய் என்பவர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.அவர் மீது ஏற்கனவே இரு வழக்குகள் இருப்பதாகவும், விஜயின் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த்து 3.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக கூறினார். இந்நிலையில் நேற்று விஜய் மாமியார் யோகராணி என்பவர் தர்ம்புரி மாவட்டம் தும்பலஹல்லியில் இலங்கை அகதிகள் முகாமில் கைது செய்யபட்டுள்ளதாகவும், அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க,வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 300 முதல் 400 கிராம் நகைகள் மட்டும் மீட்கப்பட வேண்டி உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் ஐந்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு நகைகளை மீட்டு இருப்பதாகவும், கொள்ளை போன நகைகளில் 95 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது எனவும், விஜய் என்பவரை தேடி வருவதாகவும், இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் குற்றவாளியை பிடித்து விடுவோம் எனவும் தெரிவித்தார். மொத்தம் 4.8 கிலோ நகைகள் திருடப்பட்டு உள்ளது என தெரிவித்தவர் நகைகடையில் இருந்த சின்ன ஓட்டையை பயன்படுத்தி உள்ளே நுழைந்து திருடி உ்ள்ளனா்.திருட்டு சம்பவத்திற்கு யார் உதவி செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விஜய் கைது செய்தால் மட்டுமே உதவிய நபர் யார் என்பது தெரிய வரும். தும்பலஹல்லி இலங்கை அகதிகள் முகாமில் வைர நகைகளை குழிதோண்டி புதைத்து வைத்து உள்ளனா். புதர்களுக்குள் கவர் போட்டு மறைத்து வைத்திருந்த நிலையில் நகைகள் பறிமுதல் செய்யபட்டதாக தெரிவித்த அவர் நகை திருட்டில் ஈடுபட்ட விஜய் ஆனைமலையில் இருந்து தப்பி ஒடிவிட்டதாகவும் பிடிபட்டு இருந்தால் விஜயின் முழுமையான திட்டம் தெரிய வரும் என்றார்.நகை கொள்ளைக்கு வெளிநபர்கள் தொடர்பு கட்டாயம் இருக்கலாம். இலங்கை அகதிகள் முகாமில் இருந்து விஜயின் மனைவி நர்மதா எப்படி வெளியில் சென்றார் என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறது என துணை ஆணையர் சந்தீஷ் தெரிவித்தார்.

Tags

Next Story