பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

வீட்டின் முன்பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

வீட்டின் முன்பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
பெரம்பலூர் அருகே வீட்டின் முன் பேசிக்கொண்டிருந்த 50 வயது பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறிப்பு, பைக்கில் வந்த வாலிபர் கைவரிசை, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை. பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில்உள்ள தீரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நமச்சிவாயம் மனைவி நளினா வயது 50. இவர் ஜனவரி - 8ம் தேதி காலை தனது வீட்டின் எதிரே உள்ள விஜயதாரணி என்ற பெண்ணிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனை பைக்கில் நின்றபடி நோட்டமிட்ட வாலிபர் திடீரென அதிவேகமாக நளினியின் அருகே சென்று, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிச் செயினை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகினர். இந்த திடீர் செயின் பறிப்பு சம்பவத்தால் நிலைகுலைந்த நளினா, கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் அப்பதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்குப்பதிந்து, இருசக்கர வாகனத்தில் சென்று, செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நேரத்தில் நிகழ்ந்த இந்த செயின் பறிப்பு சம்பவம், தீரன் நகர் குடியிருப்பு பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .

Tags

Next Story