பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விசாரணை நடத்திய குளச்சல் எ எஸ்பி பிரவீன் கெளதம்
குளச்சலில் ரூ.20 கோடி பணம் கேட்டு பள்ளி வாசலுக்கு போலி முகவரியுடன் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. நேற்று மதியம் பள்ளிவாசல் முகவரியிட்ட ஒரு சாதாரண கடிதம் தபால் ஊழியர் கொண்டு கொடுத்து விட்டு சென்றார். கடிதத்தை படித்து பார்த்தபோது, அந்த கடிதம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆலய அறங்காவலர் குழு உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் என்பவர் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தில், ஜூம்மா மசூதி புறம்போக்கு மற்றும் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளதாகவும், மசூதியை இரண்டு நாட்களுக்குள் மாற்ற நடவடிக்கை எடுக்க விட்டால் மலையை வெடி வைப்பவர்களை கொண்டு, வெடிக்க செய்து மண்ணோடு மண்ணாகி விடுவேன் எனவும், மசூதியை காப்பாற்ற வேண்டுமானால் வளர்ச்சி நிதியாக ரூ. 20 கோடி தர வேண்டும். என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 8மசூதிகளை ஒரே நாளில் ஒரே நேரத்தில் மண்ணோடு மண்ணாக்க குறி வைத்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மசூதி நிர்வாகிகள் குளச்சல் போலீசில் புகார் அளித்தனர். குளச்சல் ஏ எஸ் பி பிரவீன் கெளதம் தலைமையில் போலீசார் பள்ளிவாசலில் விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.குளச்சலில் ரூ.20 கோடி பணம் கேட்டு பள்ளி வாசலுக்கு போலி முகவரியுடன் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மேலே குறிப்பிட்ட முகவரியில் அரிகிருஷ்ணன் என்ற பெயரில் எவரும் இல்லை என தெரியவந்தது. இந்த மிரட்டல் கடிதம் அனுப்பியவரை சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் பிடிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story