கல்லூரி மாணவா் உடல் சடலமாக மீட்பு - சாலை மறியல் போக்குவரத்து துண்டிப்பு

கல்லூரி மாணவா் உடல் சாலையோரத்தில் சடலமாக மீட்பு. சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உறவினர்கள் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து துண்டிப்பு.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வேடகட்டமடுவு கிராமத்தை சேர்ந்த குமார் மகன் சுள்ளான் (20) அரூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஈட்டியம்பட்டி கூட்ரோடு கிராமத்தை சேர்ந்த பெண் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அவரை பார்ப்பதற்கு இரவு நேரத்தில் சொந்த கிராமத்தில் இருந்து இளைஞர் சென்றதாகவும், பெண்ணின் சொந்த கிராமத்திற்கு முன்பாகவே உள்ள வேப்பம்பட்டி கிராமத்தின் அருகே சாலை ஓரத்தில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பின்பு உடலை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்து சென்றனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த உறவினர்கள் அரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சுள்ளான் இறப்பிற்கு நீதி வேண்டி கிராம மக்கள் உறவினர்கள் ரவுண்டாணா சாலை சந்திப்பில் சாலையில் உருண்டு மறியலில் ஈடுபட்டனர். மறியல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதில் சென்னை திருவண்ணாமலை சேலம் பெங்களூர் செல்லக்கூடிய மக்கள் பேருந்து பயணிகள் பாதிக்கப்பட்டனர். தாய் உறவினர்கள் சாலையில் உருண்டு கதறி அழுத காட்சி பார்ப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story