மோசடி வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கைது

மோசடி வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கைது

தயாரிப்பாளர் ஜானி தாமஸ்

பணமோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற கேரளாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரை கோவை போலீசார் கைது செய்தனர்.

கோவை:கேரளாவைச் சேர்ந்த ஜானி தாமஸ் என்பவர் ஜானி சகாரிகா என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்து விநியோகித்தும் வந்துள்ளார்..2002ம் ஆண்டு மோகன்லால் நடித்த தாண்டவம் 2018ல் வெளியான நான்சென்ஸ் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளார். பல்வேறு படங்களுக்கு விநியோகஸ்தராகவும் பைனான்சியராகவும் இருந்து வந்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு கத்தாரில் பணிபுரிந்து வந்த கோவை வடவள்ளி குருசாமி நகரைச் சேர்ந்த சேர்ந்த துவாரக் உதயசங்கர் என்பவர் ஜானிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.அப்போது 5 படங்களை தயாரிக்கப் போவதாகவும் புதிய படங்களில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என துவாரக்கிடம் ஜானி தாமஸ் மற்றும் அவரது மகன் உறுதி அளித்துள்ளனர். இதை அடுத்து முதல் கட்டமாக 75 லட்சம் ரூபாயை துவாரக் முதலீடு செய்துள்ளார். இதை வைத்து ’நான்சென்ஸ்’ என்ற திரைப்படத்தை ஜானி தாமஸ் தயாரிக்கத் தொடங்கி நிலையில் இரண்டாம் கட்டமாக இரண்டு கோடி ரூபாயை துவாரக் ஜானியிடம் வழங்கியுள்ளார். 2018ம் ஆண்டு பணத்தை திரும்ப கேட்டபோது படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறிய ஜானி மற்றும் அவரது மகன் ரான் ஜானி ஆகியோர் சில நாட்கள் கழித்து 50 லட்சம் ரூபாயை மட்டும் லாபம் எனக் கூறி உள்ளனர்.

மீதி பணத்தை திரும்ப கேட்டபோது காலம் தாழ்த்தியதுடன் பின்னர் தருவதாக உறுதியளித்துள்ளனர். இந்த நிலையில் அவரது சொத்துக்கள் வாங்கியது துவாரக்கிற்கு தெரிய வந்தது.தற்போது கனடாவில் வசித்து வரும் துவாரக் இது தொடர்பாக அந்நாட்டு தூதரகம் மூலமாக பரிந்துரை பெற்று கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் ஜானி மற்றும் அவரது ரானி ஜானி ஆகியோர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்த நிலையில் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ஜானி தாமஸை கொச்சியில் உள்ள நெடும்பாசேரி விமான நிலையத்தில் வைத்து கொச்சி போலீஸார் தடுத்து நிறுத்தி கோவை போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில் நேற்று ஜானி தாமஸை கைது செய்த கோவை போலீஸார் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story