சிறுமி மரணம் - உடற்கூராய்வில் கண்டறியப்பட்ட பாலியல் துன்புறுத்தல்

சிறுமி மரணம்  -  உடற்கூராய்வில் கண்டறியப்பட்ட பாலியல் துன்புறுத்தல்

ஆட்சியரிடம் மனு 

மயிலாடுதுறை அருகே, கிராமத்தில் 9 வயது பள்ளி சிறுமி ஒருவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 1ம் தேதி உயிரிழந்தார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், செம்பனார்கோவில் போலீசார், வழக்குப்பதிவுசெய்தனர்.திருவாரூர் மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் நடந்த உடற்கூறு ஆய்வில், சிறுமிக்கு, காய்ச்சலால் ஜன்னி வந்து உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அத்துடன் அந்த சிறுமி, பலமுறை பாலியல் தொந்தரவுக்கு, உள்ளாக்கப்பட்டுள்ளதாக தனி மருத்துவ அறிக்கை கூறியது.

இதையடுத்து போலீசார் நீதிமன்ற உத்தரவு பெற்று சிறுமியின் உறவினர்கள், 5 பேருக்கு மரபணு பரிசோதனை செய்தனர். மாதிரி ஒத்துப் போகவில்லை. மேலும் 10 பேரிடம் மரபணு பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஷங்கமித்திரன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் பாலியல் துன்புறுத்தல் என மருத்துவஅ றிக்கை வந்ததும், போக்ஸோ வழக்காக மாற்றவில்லை, மரபணு சோதனை, முடிவை பெற, நடவடிக்கை இல்லை, குற்றவாளிகள் தப்பாமல் இருக்க, நடவடிக்கை வேண்டும் எனகேட்டிருந்தார். இதுகுறித்து, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மீனா, மரபணு சோதனை முடிவை உடனடியாக பெறும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார், சோதனை முடிவு வந்ததும் இந்தவழக்கு போக்ஸோ வழக்காக மாற்றப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story