+1 மாணவி அடித்து கொலை - சிசிடிவியால் சிக்கிய பெற்றோர்

+1 மாணவி அடித்து கொலை - சிசிடிவியால் சிக்கிய பெற்றோர்

காவல் நிலையம் 

ஒசூர் அருகே ஏரியில் பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் காதல் விவகாரத்தால் பெற்றோரே மகளை அடித்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் தாய் ,தந்தை உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலுார் அருகே பட்டவாரப் பள்ளியை சேர்ந்த பிரகாஷ் (50) என்பவரின் மகள் ஸ்பூர்த்தி (16 ) பாகலுார் அரசு பெண்கள் பள்ளியில் + 1 படித்து வந்தார். கடந்த, 14ம் தேதி காலை வீட்டி லிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் இரவு தலையில் காயங்களுடன் பட்டவாரப்பள்ளி ஏரியில் சடலமாக மிதந்தார். பாகலூர் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர் .

இதில் மாணவி ஸ்பூர்த்தி முத்தாலியை சேர்ந்த வாலிபர் சிவா (25) என்பவரை காதலித்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள். மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாத நிலையில் கடந்த 2022 ல் மாணவியை ஆசை வார்த்தை கூறி வீட்டிலிருந்து சிவா அழைத்து சென்றார். மாணவியின் பெற்றோர் ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் பேரில் போலீசார் சிவாவை போக்சோவில் கைது செய்தனர்.

இந்த நிலையில் பெற்றோர்கள் கண்டித்தும் தொடர்ந்து மாணவி ஸ்பூர்த்தி, சிறையில் இருந்து வெளியே வந்த சிவாவுடன் காதல் தொடர்ந்ததால் மேலும் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் பாகலூர் போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்துள்ளனர் மாணவியின் வீட்டின் அருகே உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் பார்த்தபோது மாணவி மாயமான சமயத்தில், மர்ம நபர் ஒருவர், 'சிசிடிவி' கேமராவை துணி போட்டு மூடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவியை யாரோ அடித்து கொன்று, சடலத்தை ஏரியில் போட்டது போலீசார் விசாரணையில் உறுதியானது. இது சம்பந்தமாக மாணவியின் தந்தை பிரகாஷ் (40) தாய் காமாட்சி (35),ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் , விசாரணையில் தொடர்ந்து சிவாவை மறந்து விட வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இதனால் மறுத்த மகளை வீட்டின் கட்டில் கட்டையில் தலையில் அடித்து கொலை செய்ததாக தெரிகிறது, பின்னர் சடலத்தை மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வீசி விட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை அடுத்து போலீஸ் விசாரணை அடிப்படையில் மாணவி அப்பா பிரகாஷ், அம்மா காமாட்சி, மாணவியின் பெரியம்மா மீனாட்சி ஆகிய மூன்று பேரையும் பாகலூர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மாணவியை பெற்ற தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story